போராட்டம் நடத்த அ.தி.மு.க. பின்வாங்காது – டி.ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தா
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் ,அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.
:-
கேள்வி:- .அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளதே
பதில்:- நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் கழகம் என்ன செய்கிறது என்ற அசைவுகளைத்தான் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறது. எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. புரட்சித்தலைவர் காலத்திலும் சரி,அம்மா காலத்திலும் சரி.அந்த எதிர்பார்ப்புகளை கழகம் நிறைவேற்றியது. ஒட்டுமொத்தமாக இந்த விடியாத அரசு பொறுப்பேற்று ஒரு வருட காலத்திலே மக்கள் விரோத போக்கு, ஆட்சியின் அவல நிலை, இவை அனைத்தும் தோலுறுத்தி காட்டும் வகையிலும், அதே நேரத்தில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் இந்த பொதுக்குழு தீர்மானத்தில் இருக்கும். கட்சியில் இல்லாத ஒருவர் ( சசிகலா) குறித்து ஏன் பேசவேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளரே சொல்லியுள்ளார். அவர்கள் கட்சியில் இல்லை.அவர்கள் குறித்துப் பேச வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது.
கேள்வி:-.ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளதே
பதில்.:- அம்மாவின் ஆட்சியில் எடப்பாடியார் ஒரு சட்டம் கொண்டுவதது . அண்ட சட்டத்தில் சில மாற்றங்களை செய்யவேண்டும் என்றுதான் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால் இந்த விடியா அரசு ஆன்லைன் ரம்மி, போலியான லாட்டரி, கஞ்சா, போதைப் பொருட்கள். இவை அனைத்தும் சர்வ சாதாரணமாக நடமாடும் மாநிலம் தமிழகம் என்ற அடிப்படையிலே, ஆன்லைன் மூலம் 23 பேர் தங்களுடைய இன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையிலே, ஏன் இந்த வழக்கை எதிர்த்து அப்பீல் போகவேண்டும்.
சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். வாங்குவதை வாங்கிக்கொண்டு. பெறுவதைப் பெற்றுக்கொள்ளும் வேலைதான் இது. நாங்கள் அடிப்பதுபோல அடிப்போம். நீங்கள் அழுவதுபோல அழ வேண்டும். இதுதான் இதில் நடக்கிறது. இதற்கு குழு போடவேண்டிய அவசியமே இல்லை. இதனை உடனடியாக தடை செய்து முற்றிலும் ஒழிப்பதற்கு மாநில அரசே அதிகாரம் படைத்தது. இப்படி இருக்கும்போது ஏன் குழு போட்டுச் சுற்றவிடுகிறீர்கள். இதில் நீங்கள் ஆதாயம் கருதி இந்த வேலையைச் செய்துள்ளீர்கள்.
‘
கேள்வி:- தமிழகத்தில் பா.ஜ.க. தொடர்ந்து போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று செய்துவருகிறது. நாங்கள்தான் அதிகமாக மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துகிறோம் என்கிறார்கள். ஏன் அ.தி.மு.க. அதிக போராட்டத்தை நடத்தவில்லை.
பதில்:- ஒவ்வொரு கட்சியினரும் போராட்டம்,ஆர்ப்பாட்டம் என்று செய்வார்கள். இது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. விலைவாசி உயர்வு போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லையா. சொத்துவரி உயர்வுக்குப் போராட்டம் செய்யவில்லையா. தொழிற்சங்கங்கள் ஆங்காங்கே போராட்டம் செய்துவருகிறது. மின் வாரியத்தில் நடைபெற்ற அவல நிலையைக் கண்டித்து என் தலைமையில் ஒரு போராட்டம் நடந்தது. நாங்கள் அதிக அளவு போராட்டம் நடத்தவில்லை என்ற மாயை பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அவர்கள் (பாஜக) கட்சியை வளர்ப்பதற்கு நாங்கதான் என்று பிரசாரம் செய்யலாம். ஆனால் எங்களுக்கு என்று ஒரு கடமை உள்ளது. மக்கள் விரோத போக்கு, ஜனநாயக விரோத போக்கு, இந்த ஆட்சியின் அவல நிலை குறித்து மக்களிடையே தோலுரித்துக் காட்டுவதற்கு ஒரே ஆயுதம் எது என்றால் அது போராட்டம்தான். இதில் நாங்கள் ஆர்ப்பாட்டத்திற்கும்,போராட்டத்திற்கும் நாங்கள் என்றும் பின்வாங்கியதில்லை-. தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது அவ்வப்போது பம்மி விடுவார்கள். மக்கள் விரோத போக்கை இந்த அரசு கடைப்பிடிக்கும்போது வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய இயக்கம் கழகம்தான்.
.அவர்களுடைய கட்சியை அவர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். அது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் எங்களுடைய கடமையிலிருந்து நாங்கள் என்றும் தவறுவது கிடையாது.
கேள்வி:- .லாக்கப் மரணங்கள் தொடர்பாக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதே…..
பதில்:- லாக்கப் மரணம் என்பது இந்த ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம். நிர்வாகத் திறமையுள்ள முதலமைச்சராக இருந்தால் காவல்துறையை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கண்ணில் விளங்கெண்ணையை ஊற்றிக்கொண்டு சட்டம் ஒழுங்கை பராமரித்து லாக்கப் மரணங்கள் இல்லாமல் பொதுமக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தர முடியும். அவரை பொறுத்தவரையில் தினமும் தொலைக்காட்சியில் வரவேண்டும். கையில் ரிமோட்டை பிடிக்கவேண்டும். கத்திரி கோல் எடுத்துக்கொண்டு திரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதே தவிர வேறு எந்த எண்ணமும் இருக்கின்றதா அவருக்கு.
இதன் காரணமாக காவல்துறை கட்டுக்குள் அடங்காமல் போய்விட்டது. காவல்துறை என்பது குதிரை.அதன் லகானை சரியாக பிடித்துக்கொண்டு சென்றால்தான் சரியான பாதையில் செல்லும். இதில் கட்டுபாடு இல்லை என்றால் தறிகெட்டுத்தான் ஒடும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் எஸ்,செம்மலை, ஜே,சி.டி,.பிரபாகரன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்,







