கந்து வட்டி கடன் புகார்: கைதானவர் வீட்டில் இருந்து 22 ஆவணங்கள் பறிமுதல்- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

 கந்து வட்டி கடன் புகார்: கைதானவர் வீட்டில் இருந்து 22 ஆவணங்கள் பறிமுதல்- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த நம்பி (வயது 49). இவர் ஒரு பெண்ணிடம் நிலத்தின் ஆவணங்களை அடமானமாக வாங்கிக்கொண்டு ரூ. 2,50,000- ஐ வட்டிக்கு கடனாக கொடுத்து இருக்கிறார். பின்னர் அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததார்.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரித்து கடந்த 9.6.2022 அன்று நம்பியை கைது செய்தனர்.

பின்னர் நம்பி வீட்டை நேற்று (10.6.2022) சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டிலிருந்து தொகை நிரப்பப்படாமல் கையெழுத்துக்கள் மட்டும் போடப்பட்ட 6 காசோலைகள் உட்பட 26 காசோலைகள் உள்ள ஒரு காசோலை புத்தகம், கடன் பெற்றவர்களின் 3 ஏ.டி.எம். கார்டுகள், நம்பி ஒருவரிடம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றதற்கான ஆவணம், அண்ணாமலை என்ற பெயரில் கையெழுத்து, கைரேகை மற்றும் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட ஒரு வெற்று பத்திரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் நாசரேத் ஆகிய சார்பதிவாளர் அலுலவலகங்களில் பத்திரபதிவு நடைபெற்ற வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட 6 சி.டி.க்கள், காசோலை மோசடி வழக்கு சம்மந்தமான ஆவணம், கடன்பெற்றவரின் ரூ. 12,000/- மதிப்புள்ள அடமான கடன் பத்திரம், கடன்பெற்றவரின் பத்திர பதிவு செய்யப்படாத பத்திரம், நம்பியிடமிருந்து ஒருவர் ரூ. 3 லட்சம் கடன் பெற்றதாக எழுதிகொடுத்த பத்திரம் , தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்ட ரசீது நகல், ரூ. 1 லட்சத்திற்கு கடன் கொடுத்தற்கான பத்திரம், நம்பி தனது வங்கி கணக்கில் ரூ. 3,01,000 செலுத்தியதற்கான ரசீது, கடன் பெற்ற 2 பேர்களின் இரு சக்கர வாகனங்களின் ஆர்.சி. புத்தகங்கள் உட்பட 22 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *