கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
![கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது](https://tn96news.com/wp-content/uploads/2022/06/IMG-20220612-WA0045-850x472.jpg)
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராஜி (எ) தோட்டா ராஜ் (27) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ராஜி (எ) தோட்டா ராஜ் மீது கோவில்பட்டி மேற்கு,கிழக்கு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகிய காவல் நிலையங்களில் 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)