கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர் மகாலட்சுமி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த சங்கரநாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக திருநெல்வேலி பயிற்சி துணை ஆட்சியராக இருக்கும் மகாலட்சுமி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர் மகாலட்சுமியின் தந்தை தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்துக்கொண்டு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். உதவும் உள்ளங்கள் என்ற சமூக அமைப்பின் உதவியால் பள்ளிக்கல்வியை முடித்த மகாலட்சுமி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரியில் 2௦15-ம் ஆண்டு பி,டெக். படித்து முடித்தார்.
பின்னர் அவர் ஐ.ஏ.எஸ். பயிற்சியில் காலடி எடுத்து வைத்தார். மனிதநேய மன்றத்தில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.
2020 -ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றார். விருதுநகர் மாவட்டத்தில் அவர் 4-வது இடத்தில் தேர்வானார். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும் மகாலட்சுமி தற்போது கோவில்பட்டி கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் ஆற்றப்போகும் சேவைக்கு www.tn96news.com தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.







