கோவில் விழாவில் அன்னதானம்

கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் கோவில் 58 ஆம் ஆண்டு கொடை விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
இதையொட்டி இன்று அன்னதான திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், 24-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார
இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அம்மா பேரவை ஒன்றிய துனை செயலாளர் சாமிராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர் கவியரசன், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
