கோவில்பட்டியில் நாளை இலவச பொது மருத்துவ முகாம்
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும்
1974-77ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்துகின்றன,&
இந்த முகாம் கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது,

இந்த முகாமில் உயரம், எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவு, மருத்துவரின் பரிந்துரைப்படி இ.சி.ஜி/ பரிசோதனை மற்றும் பொது நல மருத்துவரின் ஆலோசனை , மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
மருத்துவ உதவிக்கு 94434 55679 | 96982 93211 | 90958 88211 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







