கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரி பட்டமளிப்பு விழா: விஞ்ஞானி காளிராஜ் பட்டம் வழங்கினார்
Oplus_16908288


கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் (எஸ். எஸ். டி. எம்.)கலை மற்றும் அறிவியல் கல்லூரி 27வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஆர். எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் கண்ணன், நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மும்பை நியூக்ளியர் புரொஜ்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் விஞ்ஞானியுமான
காளிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளங்கலை பிரிவில் 173 மாணவர்களுக்கும், முதுகலை பிரிவில் 17 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் விஞ்ஞானி காளிராஜ் பேசியதாவது:
இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் பட்டதாரியாக சமுதாயத்திற்குள் செல்ல இருக்கிறீர்கள்.மாணவர்கள் பெற்ற பட்டம் சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் பயன் தருவதாக அமைய வேண்டும்,
தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தி தொழில் முனைவோராக உருவாகி மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவராக உருவாக வேண்டும்.
இந்திய நாடு திறமையும் இளமையும் நிறைந்த நாடாகும். சராசரி வயது இந்தியாவில் 28,29,சீனாவில் 40,45 அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 45,5 ஆகும்.
சமூக வலைதளங்களை பொழுதுபோக்குக்கு பயன்படுத்தாமல் வளர்ச்சிக்கும் தொழிலுக்கும் பயன்படுத்த வேண்டும்.

மாணவர்கள் பட்டம் பெற்று தொழில் தொடர்பாக வெளிநாடுகளில் பணி
புரிந்தாலும் அது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்உதவுவதாக அமையவேண்டும்.
இவ்வாறு விஞ்ஞானி காளிராஜ் பேசினார்
விழாவில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், தங்கமணி, ராஜ்மோகன், சரவணகுமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன்,கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நாடார் உறவின்முறை சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.







