பெண் போலீசை தாக்கிய ஏட்டு கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பெண் போலீசை தாக்கிய ஏட்டு கைதானார்.போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை தென்காசி மாவட்ட எஸ்பி அசோக்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார் பட்டியை அடுத்த குருக்கள்நாடார் பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பொன்ராஜ் (வயது 40). இவர்கடையநல்லூர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணி
புரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் மீனா என்பவருடன் பொன்ராஜ்க்கு தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அங்குள்ள காவலர் குடியிருப்பு அருகே வைத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பொன்ராஜ், பெண் போலீஸ் மீனாவை தாக்கி அவதூறாக பேசியுள் ளார். இதுகுறித்து பெண் போலீஸ் மீனா, கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விசாரணை நடத்தி பெண் வன்கொடுமை தடுப் புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பொன்ராஜை கைது செய்தார். தொடர்ந்துஅவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட தலைமை காவலர் பொன்ராஜை தென்காசி மாவட்ட எஸ்பி அசோக்குமார் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.







