கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்; 583 வழக்குகளுக்கு தீர்வு

கோவில்பட்டியில் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 583 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில் 583 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது.

மோட்டார் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 1,101 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.,இதில் 583 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ.2 கோடியே 12லட்சத்து 89ஆயிரத்து 124க்கு தீர்வு காணப்பட்டது.
வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







