ஆட்டோ தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம்

தூத்துக்குடி மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் நடந்தது. மாநாட்டிற்கு பாபு தலைமை தாங்கினார்.
ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலசிங்கம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், நகர உதவி செயலாளர் விஜயலட்சுமி, நகரக்குழு உறுப்பினர் முனியசாமி ஆகியோர் பேசினர்.

மாவட்ட ஏஐடியுசி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கரும்பன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க புதிய மாவட்ட தலைவராக பாபு, செயலாளராக பாலசிங்கம், பொருளாளராக அசோக்குமார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில்b நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* ரேபிடோ பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும்.
*இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலைப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
*ரெயில்வே சுரங்கப்பாதையில் உருவாகி உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
* ஆட்டோ தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







