எட்டயபுரத்தில் மகாகவி தினம் : பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
Oplus_16908288

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் செப்டம்பர் 11ம் தேதியை மகாகவி தினமாக கடைபிடிக்க தமிழக அரசு 2021ல் அறிவித்தது.
அதன்படி நேற்று எட்டயபுரம் மகாகவி பாரதியாரின் நினைவு மணி மண்டபத்தில் நடந்த மகாகவி தினத்தில் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 30 இளம் பாரதிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பாரதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
பாரதியின் பாடல்களை பாடி பாரதி கண்ட கனவை நிறைவேற்றவும்,
குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திட உதவி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து பயிற்சி அளிக்கவும்,குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி குழந்தை திருமணம் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடவும்,நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வம்,
முதியோர் பிரிவு தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.
பாரதி வேடம் அணிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்க இணைச் செயலாளர் நடராஜன், பாரதி ஆய்வாளர் பொன்.பரமானந்தம், வழக்கறிஞர் முத்துராமலிங்கம்,
தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமையாசிரியர் சொர்ணலதா, மாரியப்ப பநாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை ஹெப்சிபாய் நன்றி கூறினார்.
பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம்

பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் சார்பில் எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஏ ஐ டி யு சி மாநில தலைவர் காசி விஸ்வநாதன் மாலை அணிவித்தார்.
பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ் ராஜா,செயலாளர் பாலமுருகன், நிர்வாககுழு உறுப்பினர்கள் கணேசன் ,சோலையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாரதி நாமம் வாழ்க…..பாரதி புகழ் ஓங்குக என்ற முழக்கமிட்டு பாரதிக்கு அஞ்சலி செலுத்தினர்.







