முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள்: மாவட்ட ஆக்கி போட்டியில் வ.உ.சி.பள்ளி அணி முதலிடம்
வ.உ.சி.அரசு ஆண்கள் பள்ளி அணி

தூத்துக்குடி மாவட்ட அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தின ராஜா ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவு என பல பிரிவுகளாக முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள எஸ்டிஏடி ஆக்கி மைதானத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய ) இரண்டு நாட்கள் நடைபெற்றது இப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் 24 அணிகளும் பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்துகொண்டு விளையாடின
போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டன ஆண்கள் பிரிவில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

பெண்கள் பிரிவில் தூத்துக்குடி தஷ்னவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஏ மற்றும் பி அணி, இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி, ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
இறுதியில் ஆண்கள் பிரிவில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் நாடார் மேல்நிலைப் பள்ளியும் வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியும் விளையாடியது இதில் ஆட்ட நேர முடிவில் கோல் எதுவும் இன்றி சமநிலையில் முடிந்ததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டு 4-3 என்ற கோல் கணக்கில் நாடார் மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தை பெற்றது தோல்வியடைந்த வேல்ஸ் வித்யாலயா பள்ளி நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது
இறுதிப் போட்டியில் கோவில்பட்டி வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் செயின்ட் ஃபால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் விளையாடியது ஆட்ட நேர முடிவில் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்ததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டு 4 – 2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தை பெற்றது
பெண்கள் பிரிவில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி அணி 2 – 0 என்று கோல் கணக்கில் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பி அணியினரை வெற்றி பெற்று இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும் கோவில்பட்டி அரசு பெண்கள் பி அணி நான்காவது இடத்தையும் பெற்றது
பெண்கள் பிரிவில் இறுதி போட்டியில் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஏ அணி 3-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி தஸ்நவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றது இரண்டாவது இடத்தை தஸ்நவீஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தக்க வைத்துக் கொண்டது


முதலிடம் பெற்ற ஆண்கள் பிரிவில் கோவில்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் பெண்கள் பிரிவில் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலா ரூ.3000 வீதம் 18 வீரர்களுக்கு 54,000 ரூபாயும் இரண்டாவது இடம் பெற்ற ஆண்கள் பிரிவில் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும் பெண்கள் பிரிவில் தூத்துக்குடி தஸ்னவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும்தலா ரூபாய் 2000 வீதம் 18 வீரர்களுக்கு 36,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்க்கப்பட்டது,
மூன்றாவது இடம் பெற்ற ஆண்கள் பிரிவில் நாடார் மேல்நிலைப்பள்ளி அணிக்கும் பெண்கள் பிரிவில் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளிக்கும் தலா ரூ.ஆயிரம் வீதம் 18 வீரர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது

ஆண்கள் பிரிவு இறுதி போட்டியை துவக்கி வைப்பதற்கு கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் அதிர்ஷ்டராஜ் தலைமையில் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சங்கரநாராயணன் போட்டியை துவக்கி வைத்தார்
பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியை தென்காசி மாவட்ட ஆக்கி கழக துணைச் செயலாளர் பேராசிரியை பேபி மாலினி துவக்கி வைத்தார் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா கோவில்பட்டி அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் பூபதி ராஜன் நாகலாபுரம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆல்ட்ரின் அதிசயராஜ் விழாவில் கலந்துகொண்டனர்
போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆக்கி பயிற்சியாளர் ஹானஸ்ட் ராஜ் செய்திருந்தார் போட்டியில் நடுவர்களாக புகழேந்தி மதன் குமார் , சுரேஷ்குமார், மாரியப்பன், வேல்முருகன், சுரேந்திரன், ஜெய் கணேஷ், மதனா, முகேஸ்வரி, ஆகியோர் செயல்பட்டனர்
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிம் வீரர்களை தூத்துக்குடி மாவட்ட அணிக்காக 18 வீரர்கள் கொண்ட மாவட்ட அணி தேர்வு செய்து மாநில முதலமைச்சர் கோப்பை போட்டியில் விளையாட அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்
தூத்துக்குடி மாவட்ட அணி தேர்வு முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் ஹாக்கி பயிற்சியாளர் ஆனஸ்ட் ராஜ் உடற்கல்வி ஆசிரியர் திருச்செல்வம் ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர்







