• October 29, 2026

கோவில்பட்டி பசுவந்தனை சாலையின் நடுவே தடுப்பு சுவர்; பசுமை-தூய்மை இயக்கம் அமைக்க முடிவு

 கோவில்பட்டி பசுவந்தனை சாலையின் நடுவே தடுப்பு சுவர்; பசுமை-தூய்மை இயக்கம் அமைக்க முடிவு

Oplus_16908288

கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தலைவர் ரவிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆசியா பார்ம் பாபு முன்னிலை வகித்தார். நிர்வாக குழுவில் விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

*கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்கி. சாலையின் இருபக்கத்திலும் தடுப்பு அரண்களும் (BARRICADE), சாலையின் நடுவில் தடுப்புச்சுவரும் (DIVIDER) பசுமை-தூய்மை இயக்கத்தின் சார்பாக அமைத்துக் கொடுப்பது,  

*கோவில்பட்டி நகரத்தை பசுமையாகவும், தூய்மையாகவும் மாற்ற, நகராட்சி மற்றும் அரசு அமைப்புகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பது, அதற்கு முன்னோட்டமாக, கோவில்பட்டி இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்புதல் வாங்கி  பூவன நாதசுவாமி – செண்பகவள்ளி அம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள பகுதியில் பசுமையாகவும், தூய்மையாகவும் மாற்றிட முயற்சி செய்வது

*வருங்காலத்தில் கோவில்பட்டி அருகிலுள்ள கண்மாய் மற்றும் குளங்களை அரசு அனுமதி பெற்று தூர்வாருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

நிர்வாக குழுவில் பொறியாளர் ராகவன், மருத்துவர் சேதுராமன், தொழிலதிபர் பாபு, எழுத்தாளர் சுரேஷ்குமார், திண்டுக்கல் “வாஷ்” இன்ஸ்டிடியூட் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு க தமிழரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *