குச்சி மிட்டாய் அளவுக்குகூட பயனில்லாத வேளாண் பட்ஜெட்; கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் கருத்து
Oplus_16908288
தமிழக வேளாண்மை துறை பட்ஜெட் குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ வரதராஜன் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளை பெருமளவில் அச்சுறுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்,

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த இந்த பட்ஜெட்டில் பன்றி விரட்டி மருந்து விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இம்மருந்து ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. பயிரிடப்பட்ட நிலங்களின் வரப்புகளில் இம் மருந்துகள் தெளித்தால் பன்றிகள் வராது என கூறப்படுகிறது. இம்மருந்தின் தாக்கம் மழை பெய்த மறுநாளே வீரியத்தன்மை இழந்து விடுகிறது. பயிரிடப்பட்டு அறுவடை முடிய குறைந்த பட்சம் ஐந்து மாத காலமாகிறது. இதனால் இம்மருந்து விவசாயிகளுக்கு பலனளிக்கவில்லை.
பன்றிகளை வேட்டையாடுவதன் மூலமே முழுமையாக கட்டுப்படுத்த முடியும், தவிர மக்காச் சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 36 கோடி ரூபாய் மl கோடி ஒதுக்கீடு என அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகள் பல தலைமுறையாக முன்னோர்கள் காலம் தொட்டு சந்ததியாக விவசாயம் செய்கிறோம் அந்த நுட்பம் எங்களுக்கு தெரிந்த ஒன்றாகும். அதற்கு சிறப்பு பயிற்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக தரமான முன்னணி விதை நிறுவனங்களிடமிருந்து மானியத்தில் வீரிய ஓட்டு ரக விதைகள், உரம், மருந்து மானியத்தில் வழங்கினால் பேருதவியாக இருக்கும் .தவிர தமிழகத்தில் சுமார் 17 ஆயிர த்திற்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. மொத்த மாவட்டத்திற்கும் சேர்த்து பயிர்காப்பீடு 2025 – 2026 ம் ஆண்டுக்கு ரூபாய் 648 கோடியானது போதுமானதாக இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 200 கோடி ரூபாய் இழப்பீடு தேவையாகிறது.சிறுதானிய இயக்கம் கடந்த ஆட்சியிலும் அறிவிக்கப்பட்டது. நடைமுறைபடுத்த வில்லை, இந்த புதிய அரசு சிறுதானிய உற்பத்திற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தவிர விளாத்திகுளம் புதூர், எட்டயபுரம் பகுதியில் வெங்காயம் மிளகாய், நாட்டுக் கொத்தமல்லி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெங்காயம் செட் அமைக்க ஒரு விவசாயிக்கு இருபது மெட்ரிக் டன் அளவு கொட்டகைக்கு ரூபாய் 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது . அத்தொகை போதுமானதாக இல்லை, ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூபாய் 3500 வழங்கப்பட்டது, இதை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர், அரசு அதை பொருட்படுத்தாமல் முந்தைய நடைமுறையையே தற்போதும் பின்பற்றி உள்ளது.

ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு கொத்தமல்லி விதைகள் வழங்கப்படுகிறது. இவ்விதை முளைக்கும் இலைகள் கீரைக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால் இப்பகுதியில பயிரிடப்படும் கொத்தமல்லி செடிகள் தானியமாக விளைவிக்கிறோம் அதனால் அரசு கொடுக்கும் விதைகளை பயன்படுத்த முடியவில்லை. நாட்டுரக கொத்த மல்லி மானியத்தில் வழங்க எதிர்பார்த்தோம், அவ்வறிவிப்பும் இல்லை. ஆக வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு குச்சி மிட்டாய் அளவு கூட பயன் கிடைக்க வில்லை என்பதே உண்மையாகும்
இவ்வாறு அ.வரதராஜன் கூறியுள்ளார்







