கோவில்பட்டி ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு இணையதள பயிற்சி

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கான மை ரோட்டரி இணையதள பயிற்சி ஆசியாபார்ம்ஸ் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகள், சங்க உறுப்பினர்களின் விவரங்கள்,சேவை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பன்னாட்டு ரோட்டரியின் மை ரோட்டரி இணையதளத்தில் மொபைல் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்தும் இணையதளத்தை முறையாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்,.ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்து செல்வம்,ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட நிர்வாக செயலாளர் யூசுப் ராஜா கலந்து கொண்டு மை ரோட்டரி இணையதளத்தில் மொபைல் மூலம் சேவை திட்டங்கள் மற்றும் உறுப்பினர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்வது குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம், கண்ணன், மாரியப்பன், மணிகண்டன், நடராஜன்,ராஜமாணிக்கம்,உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க உறுப்பினர் இளங்கோவன் நன்றி கூறினார்.







