கோவில்பட்டி காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா 2-ந்தேதி தொடக்கம்

கோவில்பட்டி காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா ஆகஸ்டு 2 -ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது,.
2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மாக்காப்பு அலங்கார சிறப்பு தீபாராதனை நடக்கிறது.. இரவு 7 மணிக்கு ஆடி எனும் தேவமங்கை என்ற தலைப்பில் தேவி பக்தி சொற்பொழிவு ஆற்றுகிறார்.;.
3-ந் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு அம்மனுக்கு சந்த்தன அலங்கார சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மையும், அப்பனும் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் சத்யா மோகன் பக்தி சொற்பொழிவு ஆற்றுகிறார்.

4-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல் , பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு பெண் பக்தர்கள் மாவிளக்கு கையில் ஏந்தி நகர்வலம் வருதல் மாலை 6 மணிக்கு 21 அக்னிசட்டி ஊர்வலம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் காளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளி குடையின் கீழ் வீற்றிருந்து தங்கக்குடம், வாளி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடைபெறும்.
5-ந் தேதி புதன்கிழமை தெற்கு நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பொங்கலிடுவதற்கு புனிதநீர் எடுத்து வருதல், காலை 6 மணிக்கு கோவில் முன்பு பொங்கலிடுதல் நடக்கிறது,. காலை 9 மணிக்கு பொங்கல் சிறப்பு பூஜை நடக்கிறது,l
காலை 11 மணிக்கு மேல் பத்திரகாளி அம்மன் கோவில் முன்புறம் உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கில் அன்னதானம் நடைபெறும். மாலை 3 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பு மஞ்சள் நீராட்டு விழா நடக்கும், மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் கோவிலை சுற்றி வந்து மேளதாளத்துடன் நந்தவனம் கொண்டு சேர்க்கப்படும்,

திருவிழா முடிந்து 6-ந் தேதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கோவில் நிறைந்த திருவிளக்கு பூஜை நடைபெறும்,.இரவு 9 மணிக்கு மந்திதோப்பு நமசிவாய சங்கர் சுவாமிகளின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.,
7 ந்தேதி மாலை 6 மணிக்கு கோவில் நிறைந்த திருவிளக்கு பூஜை நடைபெறம்,.
காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜூலை 29) காலை பந்தக்கால் நாட்டு விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்,







