10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு பாராட்டு
Oplus_16908288
கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று மாணவன் கோபாலகிருஷ்ணன் பள்ளியில் முதலிடமும் , கோவில்பட்டி கல்வி மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் முதலிடமும் , தூத்துக்குடி மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு உறுப்பினா் சீத்தாராம் மகன் ஆவார்.
மாணவனின் இல்லத்திற்கு சங்க நிர்வாகிகள் நேரில் சென்று சங்கத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து , இனிப்பு வழங்கி பாராட்டுகளையும் , வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி மண்டல தலைவா் செல்வராஜ் , மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகன் மோகன் , மாநில பிரதிநிதி ராமசந்திரன் , மாநில துணை செயலாளர் வெங்கடேஷ் , செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.








