கோவில்பட்டி முகாமில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 25 பேர் தேர்வு
Oplus_16908288
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறு அன்று இலவச கண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகிறார்கள்.

ஜூன் மாத கடைசி ஞாயிறு 28-06-26 அன்று கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை முகாம் நடைபெற்றது.
முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார் .செயலாளர் ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன்,ராஜேந்திரன், பாலசுப்ரமணியன்,ராஜேந்திரன்,அருள்ஜான்,பாலகுமார், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கண் சிகிச்சை முகாமில் 135 நோயாளிகள் பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.







