கோவில்பட்டியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்
தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னை பாலவாக்கத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முகாமை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன.
இது தவிர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொட்டுமருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவில்பட்டியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்
பழைய பேருந்து நிலையத்தில் அருகில் நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

,நகர் மன்ற தலைவர் ரமேஷ், ரோட்டரி கிளப் மாவட்ட புரவலர்விநாயகா ரமேஷ், கோவில்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார்,செயலாளர் பழனி குமார், சீனிவாசன்,கண்ணன், மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுத்தார்கள்.







