தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம்: கனிமொழி எம்.பி அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.பி.தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணி அசாம் மாநிலத்தில் வீர மரணம் அடைந்துள்ளார்.

அவரது உடல் இன்று 27/06/2026 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், கூட்டுடன்காடு கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

அசாம் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, வீரர் சுடலைமணி வீர மரணமடைந்தார். இவரின் மறைவுச் செய்தி மேலக்கூட்டுடன்காடு மற்றும் தளவாய்புரம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீர மரணமடைந்த சுடலைமணியின் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் உடல் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.







