சேகர்பாபு மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடந்தது. அப்போது சென்னை துறைமுகம் தொகுதி த.வெ.க. வேட் பாளர் சினோரா அசோக், தேர்தல் பணிமனையில் இருந்தார். அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தி.மு.க.வினர், சினோரா… அசோக்கையும், த.வெ.க. தொண்டர்களையும் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சேகர்பாபு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், சேகர்பாபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சேகர்பாபு தரப்பில், சம்பவம் நடந்து 29 நாட்களுக்குபின், அதாவது புதிய அரசு பொறுப்பேற்ற பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறியது போல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது…

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால், சேகர்பாபுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







