கோவில்பட்டியில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்


கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் நாள்தோறும் பெருகி வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி மூன்று நாட்கள் நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று இந்த பணி தொடங்கியது நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. நேற்று மெயின் ரோட்டில் இந்த பணி நடைபெற்றது.
இன்று வியாழக்கிழமை பசுவந்தனைச் சாலைகள் ஆக்கிரமப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் போடப்பட்டிருந்த மேல் கூரைகள் ஆக்கிரமிப்பு தரைகள் இடித்து தள்ளப்பட்டன.
நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இருந்த பகுதிகளை அகற்றினார்கள்.
ஒரு வங்கியின் காம்பவுண்டு சுவர் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சுவரை ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.

ஆக்கிரகள் அகற்றும் பணிக்கு கடைக்காரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்பது வெறும் கண்துடைப்பாக இருந்து விடாமல் தொடர்ந்து இதில் நகராட்சி நிர்வாகம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.







