கோவில்பட்டி கல்லூரியில் ஜிஎஸ்டி விதிமுறைகள் கருத்தரங்கு
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பில் “GSTR 3B வரி அறிக்கை தாக்கல், GST விதிமுறைகள், நடைமுறை விளக்கங்கள் மற்றும் இணக்கப்பாடு” என்ற தலைப்பில் ஒருநாள் செயல்முறை பயிற்சி கல்லூரி கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் இந்து நாடார்கள் செந்தில்குமார நாடார் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல் சுயநிதிப் பாடப்பிரிவு துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான செல்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு GSTR 3B வரி அறிக்கை தாக்கல், GST விதிமுறைகள், நடைமுறை விளக்கங்கள் மற்றும் இணக்கப்பாடு தொடர்பான செயல்முறை பயிற்சிகளை வழங்கினார்.
இதன்மூலம் மாணவர்கள் GST தொடர்பான நடைமுறை அறிவைப் பெற்று, தொழில்முறை திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
இந்நிகழ்ச்சி இறை வணக்கத்தோடு, கல்லூரி செயலாளர் ப.மகேந்திரன் வழிகாட்டுதல்படி, முதல்வர் பாண்டியராணி முன்னிலையிலும், சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநர் ப.மகேஷ்குமார் அவர்கள் இணை ஆதரவிலும் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் ஜெ.ஆனந்த் ஒத்துழைப்போடு துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.







