பள்ளிக்கூட வேன் – கார் மோதல்; 4 பேர் காயம்
Oplus_16908288
கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகரை சேர்ந்தவர் அன்பழகன்(66), இவரது மனைவி சாந்தி (58), அதே பகுதியைச் சேர்ந்த சுபா(32) மற்றும் ஜெயந்தி (40) ஆகியோர் காரில் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பினர். காரை அன்பழகன் ஓட்டி வந்துள்ளார்.

கோவில்பட்டி அருகே புளியங்குளம் விலக்கு பகுதியில் கார் வந்தபோது அய்யனேரியிலிருந்து புளியங்குளத்திற்கு நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையைக் கடக்கும் போது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது மட்டுமின்றி காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர்.

இது குறித்தும் தகவல் கிடைத்ததும் மேற்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயா மட்டும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மற்ற 3பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்







