கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
Oplus_16908288




கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே இருந்ததால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்கள் மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.

ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் அறிவித்ததன் காரணமாக நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று ஜூன் 24 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதை தொடர்ந்து இன்று காலையில் நகரின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் தாங்களாகவே அகற்ற தொடங்கினார்கள்.
இதற்கிடையே காலை 10 மணிக்கு மேல் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
ஜேசிபி எந்திரங்களை வைத்து கடைக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள், சிமெண்ட் தரை கள் ஆகியவற்றை உடைத்து நொறுக்கினர்.

கோவில்பட்டி மெயின் ரோட்டில் ஒரு பகுதியில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாலை வரை பணி நடக்கும் அதன்பிறகு நாளையும் நாளை மறுநாளும் நகரின் மற்ற பகுதிகளில் தொடர்ந்து அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







