கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி; 3 நாட்கள் நடக்கிறது
கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே வருகின்றன இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் உண்டாகி வருகின்றன.
ரகரியின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் காரணமாகசுமார் 40 அடிக்கு மேல் சுருங்கி விட்டன. நகரின் அழகு பறி போய்விட்டது.

இதனால் கோவில்பட்டியில் ஆக்கிரி அகற்றகோரி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. வரும் நாட்களில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளது. நாளை 24ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள், கடைகள், பொருட்கள், வாகனங்கள், தற்காலிக அமைப்புகள் போன்றவை அமைத்துள்ளவர்கள் கவனத்திற்கு. வரும் கீழ்க்காணும் 3 தினங்கள் 24.6.2026 25.6.2026 26.6.2026 ஆகிய நாட்களில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.

எனவே, பொதுமக்கள் தாங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மேற்கூறிய தேதிகளுக்குள் தாங்களே அகற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட தேதிக்கு பின் ஆக்கிரமிப்புகள் அரக அதிகாரிகளால் அகற்றப்பட்டு, ஆணையாளர், அதற்கான செலவுகள் சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்று கோவில்பட்டி நகராட்சி அறிவித்துள்ளது.







