கோவில்பட்டி மத்திய நகர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
கோவில்பட்டி மத்திய நகர் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. 3242 கூட்டு மாவட்டத்தின் முன்னாள் தலைவர் லயன் பிரகாஷ் நிர்வாகிகளைப் பதவியில் அமர்த்தினார்.

தலைவராக சரவணக்குமார், செயலாளராக திருமலைக்குமார், பொருளாளராக பழனிமாரியப்பன் ,கிளப் அட்மினாக இராமச்சந்திரன் பொறுப்பேற்றனர்.
வட்டாரத் தலைவர் வெங்கடேஷ்வரன் அனைவரையும் வரவேற்றார். மண்டலத் தலைவர் ராஜ்குமார், வட்டாரத் தலைவர் கண்ணன், தூத்துக்குடி மாவட்ட கேபினட் அட்மின் ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கல்வி, மருத்துவம், குடும்ப நல உதவியாக 15 பயனாளர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

விழாவில் கம்பன் கழகத் துணைத் தலைவர் ராஜாமணி, ஓய்வு பெற்ற கால்நடைத் துறை இணை இயக்குநர் நாராயணசாமி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஆசியா பார்ம்ஸ் பாபு, ரவி மாணிக்கம், லயன்ஸ் மூத்த உறுப்பினர்கள் பரமசிவம், வெங்கடசுப்பிரமணியன் ராஜா, சுப்புராஜா, ராஜதுரை, அந்தோணிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் சுப்பராயன் நன்றி கூறினார்.







