கவியரசு கண்ணதாசன் 100 வது பிறந்த நாள்; உருவப்படத்திற்கு அரசு சார்பில் மரியாதை
கவியரசு கண்ணதாசன் 100-வது பிறந்தநாள் இன்று ஜூன் 24 கொண்டாடப்பட்டு வருகிறது

இதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, தியாகராய நகரில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் என்.ஆனந்த், பி.வெங்கடரமணன், நெ.மரிய வில்சன், திரு.ரா.குமார்* அவர்கள், எஸ்.தியாகராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை/ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர்(பொ) வ.தட்சிணாமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







