கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா
Oplus_16908288

கேரள மாநிலத்தின் கல்வியாளர் மற்றும் நூலக இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பி. என். பணிக்கர் நினைவாகஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை தேசிய வாசிப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி நூலகத் துறையின் வாசகர் மன்றம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறை மாணவி காயத்ரி வரவேற்று பேசினார் .
கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.முதல்வர் முனைவர் ஆர். செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர் இராஜு சிறப்புரையாற்றி, வாசிப்பின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, வணிகவியல் துறை மாணவி ஆனந்தி வாசிப்பு உறுதிமொழி ஏற்கச் செய்தார். மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் புத்தக விமர்சனங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக நூலகத் துறைத் தலைவர் செண்பகாதேவி நன்றி கூறினார்.
வாசகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களான ஆங்கிலத் துறை பேராசிரியர் திவ்யா மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்வமாதா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







