பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத் தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கி கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த ரங்கசாமி, விவசாயிகள் ஆதிமூலம் நவநீதன், தாமோதரன், சீனிவாசன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







