கல்லூரி மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி
Oplus_16908288
கோவில்பட்டி கோ வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறையின் சார்பில், “தன்னம்பிக்கை வளர்த்தல் மற்றும் எழுத்துத்திறன் மேம்பாட்டின் மூலம் மாணவர்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒருநாள் ஊக்குவிப்பு நிகழ்ச்சி கல்லூரி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ப.மகேந்திரன் ஒத்துழைப்போடு, கல்லூரி முதல்வர் பாண்டியராணி தலைமை தாங்கினார்.
கல்லூரி சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநர் மப.மகேஷ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் இந்து நாடார்கள் செந்தில்குமார நாடார் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல் சுயநிதிப் பாடப்பிரிவு துறைத் தலைவரான உதவிப் பேராசிரியர் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வதன் அவசியம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியில் எழுத்துத்திறன் முக்கியத்துவம் திறமையான தகவல் பரிமாற்றம் இலக்குகளை நிர்ணயித்து செயல்படுதல், நேர மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்தார்.
மேலும் இன்றைய போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்துக் கொள்வதன் மூலம் கல்வி மற்றும் தொழில்துறைகளில் சிறந்து விளங்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறைத்தலைவர் ஆனந்த் அவர்களின் தலைமையில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.







