கோவில்பட்டி கல்லூரியில்முதலாமாண்டு மாணவர்களுக்கான தடகள போட்டிகள்


கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடந்தது.

எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 400 மற்றும் 200,மீட்டர் ஓட்ட பந்தயம்,குண்டு எறிதல்,நீளம் தாண்டுதல்,உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடந்தது.தடகள போட்டிகளில் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்,
கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண்,ராஜ்மோகன்,முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடற்கல்வித் துறை உதவிப் பேராசிரியர் ஜெயசிவா அனைவரையும் வரவேற்றார்.
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் செல்வம், உடற்கல்வித் துறையின் உதவிப் பேராசிரியர்கள் ரமேஷ்பாண்டியன், வெங்கடேஷ்,கல்லூரி பேராசிரியர்கள் செல்வலட்சுமி, சபிதா சண்முகப்பிரியா உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உடற்கல்வித் துறைத் தலைவர் செல்லத்துரை நன்றி கூறினார்.
தடகள போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித்துறையினர் செய்திருந்தனர்







