கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா; 27-ந் தேதி நடக்கிறது
கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட காளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா 27.06.2026 காலை 8.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் நடைபெற இருக்கிறது.
பக்தப் பெருமக்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு காட்சி கொடுத்த காளியம்மனைத் தரிசித்துப் பேரானந்தப் பெருவாழ்வு பெற கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

சனிக்கிழமை காலை 7. மணிக்கு மேல் காலை 8.30 மணிக்கு மேல் 9. மணிக்குள் காலை 10.30 மணிக்கு மேல் : சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்பபூஜை, வேதபாராயணம், நடைபெறுகிறது.
தொடர்ந்தூ மகா கணபதி ஹோமம், சக்திஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திரஹோமம், திரவ்யாகுதி பூர்ணாகுதி, மகாபிஷேகம் : .காளியம்மன் திருக்கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பெறும்.
மதியம் 11.30 மணியளவில் பத்திரகாளியம்மன் திருக்கோவில் எதிரில் உள்ள.பொன்னம்பல நாடார் கலையரங்கில் வைத்து ஈ,வே.அ. வள்ளிமுத்து நாடார் இளைஞர் அணியினரால் அன்னதானம் நடைபெறும்.

இரவு 7. மணி அளவில் பத்திரகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா எட்டாவது நாள் மண்டகப்படிதாரர் நாடார் மொத்த வியாபாரிகள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் காளியம்மன் அமர்ந்து திருவீதி உலா வருதல்.நடக்கிறது.







