பள்ளி மாணவர் ஆக்கி போட்டி; கோவில்பட்டி, தூத்துக்குடி அணிகள் வெற்றி

79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக நடைபெற்று வருகிறது
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இப்போட்டி நடக்கிறது, அதன்படி இன்று ஜூன் 26 மொகரம் பண்டிகை அரசு விடுமுறை நாளில் போட்டிகள் நடைபெற்றன,

காலை 6.30 மணி அளவில் நடைபெற்ற முதல் போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை வெற்றி பெற்றது
இரண்டாவது போட்டியில் தூத்துக்குடி சீனாவானா அரசு மேல்நிலைப்பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் நாடார் மேல்நிலைப்பள்ளி ப்ளூ அணியினரை வெற்றி பெற்றனர்
மாலை 4:30 மணியளவில் நடைபெற்ற போட்டியில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி சீனாவான அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வெற்றி பெற்றது
போட்டிகளுக்கு நடுவர்களாக மதன்குமார், சிவானந்தம், சுரேஷ்குமார், அஸ்வின், மதனா, பேபி, சண்முகப்பிரியா, ஆகியோர் செயல்பட்டனர் அடுத்து வரும் ஞாயிறன்று காலை 6.30 மணி அளவில் நடைபெறும் போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி ப்ளூ அணியினரும் செயின்ட் பால்ஸ் அணியினரும் விளையாடுகின்றனர்

7.30 மணிக்கு கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அணியினரும் கயத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாட உள்ளனர்
போட்டிக்கான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி , காளிமுத்து பாண்டியராஜா, வேல்முருகன் ஆகியோர் வருகிறார்கள்







