தூத்துக்குடியில் மானிய கடன்கள் சிறப்பு நேர்காணல் திங்கட்கிழமை நடக்கிறது ; ஆட்சியர் விசு மகாஜன் அழைப்பு
சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளை (MSME DAY) முன்னிட்டு தூத்துக்குடி பைபாஸ் சாலை அருகில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் 29-6-2026 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மானிய கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் மாவட்ட தொழில் மைய மேலாளர் அ.ஸ்வர்ணலதா தலைமையில் நடைபெற உள்ளது,.

இச்சிறப்பு நேரடி நேர்காணலில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் (TWEES) கீழ் (மகளிருக்கு மட்டும்) உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு 25 % மானியமும், கைவினைத் தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கும் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு கலைஞர் கைவினைத் திட்டத்தின் (KKT) கீழ் 25% மானியமும்,
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் வியாபார நிறுவனங்களுக்கு 25 % மானியமும், புதியதாக தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 25% மானியமும்,
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டும்) உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு 35% மானியமும். பாாகப் பிரகமரின் உணவு பதப்படுத்து குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ் உணவு பொருள் சார்ந்த உற்பத்தி நிறுவங்களுக்கு 35% மானியமும் கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
வங்கி கடன் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்களான ஆதார் அட்டை , பான் அட்டை, வங்கி புத்தக நகல், குடும்ப அட்டை நகல் , மாற்று சான்று ( TC) விலைப்புள்ளி பட்டியல்(Quotation) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றை 29-6-2026அன்று நடைபெற உள்ள சிறப்பு நேரடி நேர்காணலில் கலந்து கொள்வதற்காக எடுத்து வர வேண்டும்.

இச்சிறப்பு நேரடி நேர்காணலில் புதியதாக தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற விரும்புபவர்கள் கலந்து கொண்டு பயன் அடையலாம்;. மேலும் விவரங்களுக்கு 0461-2340152 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே இச்சிறப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்ததொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் விசு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.







