கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நாள் ஆக்கிப்போட்டி
Oplus_16908288

79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கள் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நடந்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன .இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை (28 6 2026) நடைபெற்ற முதல் போட்டியை அகிலாண்டபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் துவக்கி வைத்தார். செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியினர் 8-0 என்ற கோல் கணக்கில் நாடார் மேல்நிலைப்பள்ளி ப்ளூ அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இரண்டாவது போட்டியில் கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர்

போட்டியின் நடுவர்களாக மதன்குமார், மாரியப்பன், கௌதமன், கவியரசன், சண்முகப்பிரியா, பேபி, ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்செல்வம் வேல்முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 6 புள்ளிகளும் தூத்துக்குடி சீனாவானா அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா, நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட், மற்றும் கயத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளனர்.
வரும் ஞாயிறன்று காலை நடைபெறும் முதல் போட்டியில் கயத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும் வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாட உள்ளனர் இரண்டாவது போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட் அணியினரும் கயத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாட உள்ளனர்







