கோவில்பட்டி நகராட்சி புதிய தலைவராக ஆர். எஸ்.ரமேஷ் பதவி ஏற்பு
கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக பதவி வகித்து வந்த கருணாநிதி கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.

இதனால நகராட்சி சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார்.
கோவில்பட்டி நகர்மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஆர் எஸ் ரமேஷ் பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவுடன் நகராட்சி சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது கருணாநிதி எம் எல் ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்
நகராட்சி தலைவர் பதவியேற்ற ஆர்எஸ் ரமேஷை, நகராட்சி ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.








