5 வது நினைவுதினம்: கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நினைவு தினம் ஆண்டுதோறும் மே 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.

1922-ல் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்த இவர், தனது எழுத்துக்களால் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியலையும் வட்டார வழக்கையும் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளப்படுத்தியவர்.
கோவில்பட்டியில் உள்ள கி.ரா நினைவரங்கத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு 5 வது நினைவு தினமான இன்று(மே 17) கோவில்பட்டி நகராட்சி சேர்மன் ஆர்.எஸ் ரமேஷ் தலைமையில் ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், முத்து செல்வம், முத்து முருகன், பழனிக்குமார்,மாரியப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

எழுத்தாளர் சங்கத்தினர்
கி. ரா. நினைவு நாளில் கோவில்பட்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் முழு உருவ சிலைக்கு கோவில்பட்டி வட்டார எழுத்தாளர்கள் சங்கத்தினர் மாலையிட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர், என். எஸ்..எஸ். முன்னாள் திட்ட அலுவலர் சுப்பா ராஜூ, மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கி.ரா.வின் எழுத்து பணி குறித்து நினைவு கூறப்பட்டது.







