கோவில்பட்டி புத்தக திருவிழாவில்வாசகர்களுக்கு சான்றிதழ்
கோவில்பட்டி விஸ்வா மீட்டிங் ஹாலில் புத்தக திருவிழா மே 15 தொடங்கி நடைபெற்று வருகிறது 26 ம்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது.

இதில் மாணவர்களுக்கு திருக்குறள் எழுதும் போட்டி, ஓவியபோட்டி, கட்டுரை போட்டிகள், நடைபெற்று வருகிறது.
புத்தகங்கள் அதிக அளவில் வாங்கும் வாசகர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு செம்மல் மற்றும் வாசிப்பு சிகரம் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கோவில்பட்டி நகராட்சி சேர்மன் ஆர்.எஸ்.ரமேஷ் புத்தக கண்காட்சியினை பார்வையிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களையும் அதிக அளவில் புத்தகங்கள் வாங்கிய வாசகர்களுக்கு வாசிப்பு செம்மல் சான்றிதழ்களையும் வழங்கினார்.
ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருதாளர் உதய்சங்கர், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்து செல்வம்,
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ரவிவர்மா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ்குமார்,பழனி குமார், முத்து முருகன்,நடராஜன்,கண்ணன்,மாரியப்பன்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் மணிமொழி நங்கை,பிரபு,கண்ணகி,சுரேஷ்குமார்,தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி ராஜபாண்டி நன்றி கூறினார்.







