கோவில்பட்டியில் மே 5 வணிகர்தின மாநாடு நடக்கிறது

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் 43-வது வணிகர் தின மாநாடு மே. 5-ம் தேதி கோவில்பட்டி எஸ். எஸ். டி .எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டிற்கான கால் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நாஞ்சில் குமார் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து பேசினார்,.

மாநில செயலாளர் வேதநாயகம், மாநிலத் துணைத் தலைவர் ராம் பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், இளைஞர் அணி தலைவர் ஜெயபாலன், துணைச் செயலாளர் மணிகண்டன், கோவை மண்டல தலைவர் சுதர்சன், நெல்லை மண்டல தலைவர் ராஜசேகரன், மதுரை மண்டல தலைவர் மைக்கேல் ராஜ், காஞ்சி மண்டல தலைவர் சீனி பாண்டி, சென்னை மண்டல தலைவர் ஆண்டனி பீட்டர், தூத்துக்குடி மத்திய மாவட்டம் சதீஷ், நெல்லை புறநகர் கதிரவன் ரோச், மாநில நிர்வாக குழு உறுப்பினர் தமிழரசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் ஜாகிர் உசேன், மாரிமுத்து குமார், ஜெகன், மாரியப்பன், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








