வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.
மலைப்பாதயில் 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கவிழ்ந்து உருண்ட வேன் உருண்டு 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்து விழுந்தது.
இதில் அந்த வேன் நொறுங்கியது.வேனில் பயணம் செய்த 16 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








