ஆசிய கோப்பைக்கான சப் ஜூனியர் ஆக்கி பயிற்சி முகாம்: கோவில்பட்டி வீரர், வீராங்கனை தேர்வு
ஜப்பானில் மே 29 முதல் ஜூன் 6 ந்தேதி வரை ஆசிய கோப்பைக்கான சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச ஆக்கி போட்டி நடைபெற இருக்கிறது இதில் பங்கேற்கும் இந்திய ஆண், பெண் அணிகளின் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்காக ராஞ்சியில் சப் ஜூனியர் தேசிய ஆக்கி போட்டி நடத்தப்பட்டது,. இதில் =சிறப்பாக விளையாடிய 40 வீரர் வீராங்கனைகளை பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்துள்ளார்கள்

இந்த குழுவில் தமிழகத்திலிருந்து ஆண்கள் பிரிவில் கோவில்பட்டி வீரரும் ராமநாதபுரம் விளையாட்டு விடுதியில் பயின்று வரும் வீரருமான எம். கவி சக்தி போஸ் மற்றும் பெண்கள் அணியில் கோவில்பட்டி வேல்ஸ் ஆக்கி அகடமி வீராங்கனையும் புதுக்கோட்டை விளையாட்டு விடுதி வீராங்கனைமான எம்.ஜெ.. ஜோனிஷா டெப்னி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளார்கள்.’
இவர்கள் இருவரும் போபாலில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு கலந்து கொள்வதற்காக புறப்பட்டு செல்கிறார்கள் எம். கவி சக்தி போஸ் மற்றும் எம்.ஜெ.. ஜோனிஷா டெப்னி ஆகியோரை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி, தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, வேல்ஸ் ஆக்கி அகாடமி பொறுப்பாளர் சுரேந்திரன், மதனா, முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார், முருகன், சிவானந்த், வேல்முருகன், மூத்த ஆக்கி வீரர்கள் புகழேந்தி, காளிதாஸ், சுரேஷ்குமார், தனசேகரன், முகேஷ் குமார் ,, ஆகியோர் பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்








