மெர்க்கன்டைல் வங்கியில் பணி நியமன ஆணை பெற்ற கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி மாணவிகள் இருவருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வங்கி மற்றும் மத்திய மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ஜனவரி மாதம் அறிவிக்கபட்டு மார்ச் மாதம் இணையவழி தேர்வு நடத்தபட்டது.

இதில் 60 மாணவர்கள் பங்கேற்றதில் வணிகவியல் துறையில் பயிலும் மாணவிகள், ஜெயராமலட்சுமி மற்றும் ஐஸ்வர்ய மீனாட்சி ஆகியோர் எழுத்து மற்றும் நேர்முக தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணிநியமன ஆணை பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்ற மாணவிகள் இருவருக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், உபதலைவர் செல்வராஜ் செயலாளர் ஜெயபாலன், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

எஸ்.எஸ்.டி,எம்.கல்லூரி செயலாளர் கண்ணன், கல்லூரி முதல்வர் செல்வராஜ், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் செல்வம், வழக்கறிஞர் அரவிந்த் பழனி செல்வம் மற்றும் கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் விஜய கோபாலன் உள்பட கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.







