தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம் நாளை முடிகிறது; திங்கள் முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு
சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்கப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையெடுத்து கடந்த ஆண்டு ரூ.20க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.8 முதல் 10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்நிலையில் பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனையை தடுக்கக்கோரி ஏற்கனவே கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அறிவித்தபடி கடந்த 13-ந் தேதி முதல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது,.
13-ந்தேதி தொடங்கிய வேலை நிறுத்தம் 22ந் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கபப்ட்டு இருந்தது, iஇந்த நிலையில் இந்த போராட்டம் நாளை 18-ந்தேதி சனிக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.
இது குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறி இருப்பதாவது:-‘
அன்பு நண்பர்களே வணக்கம் இன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் நமது மாவட்ட அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 25ஆம் தேதி வரை அறிவித்திருந்த கதவடைப்பு போராட்டம் நாளை சனிக்கிழமையோடு நிறுத்திக்கொள்கிறது,

திங்கள் முதல் அனைத்து தொழிற்சாலைகளும் வழக்கம்போல் இயங்குவது என்றும் தொழிலாளர் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுப்பது என்றும் வழக்கம் போல் உற்பத்தியை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது மேலும் வருங்காலத்தில் சங்கம் கதவடைப்பு போராட்டம் பற்றி விவாதிக்காது என்றும் முடிவு செய்யப்பட்டது
இவ்வாறு கூறி உள்ளனர்,







