சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரெயில்
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மற்றும் தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1. சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி (ரயில் எண்: 06151) : வரும் ஏப்ரல் 13, 2026 (திங்கட்கிழமை) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

2. தூத்துக்குடி – சென்னை சென்ட்ரல் (ரயில் எண்: 06152) : வரும் ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) மதியம் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். மறுநாள் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மேலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சென்னை திரும்பும் போது பெரம்பூர் நிலையத்திலும் நிறுத்தப்படும்.

இந்த சிறப்பு ரெயிலில் ஏசி இரண்டு அடுக்கு 2, ஏசி மூன்று அடுக்கு 5, தூங்கும் வசதி 11, பொது வகுப்பு 4, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் 2 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த சிறப்பு ரெயில்களுக்கான (06151/06152) முன்பதிவு நாளை (ஏப்.8) காலை 08.00 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால மற்றும் பண்டிகைக்கால நெரிசலைத் தவிர்க்க பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்







