கம்மநாயுடு சமுதாய மக்கள் வாக்கு யாருக்கு? மகாஜன சங்க மண்டல நிர்வாகிகள் அறிக்கை
செல்வராஜ்-கற்பூரராஜ்
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டல தலைவர் ஆர்.செல்வராஜ், மண்டல் செயலாளர் வி.கற்பூரராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எங்கள் சமுதாய கோரிக்கைகள்
* வடுகர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் கம்மவார் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்கவேண்டும்.
*தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் எங்கள் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினர் என சான்று தடையில்லாமல் (இனணயதளம் மூலம்) வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
*மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மருத்துவம், பொறியியல், கலை & அறிவியல் கல்லூரி பட்டியலிட்டு அரசு வெளியிட வேண்டும்.

அரசு வேலைவாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். *உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு கோவில்பட்டியில் முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
*கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
* கோவில்பட்டி நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டுதல் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணம் உடையவர்களுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் சமுதாயத்தின் ஆதரவு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்,








