• March 17, 2026

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” – ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு  ரஜினிகாந்த் பதில்

 “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” – ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு  ரஜினிகாந்த் பதில்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா  திமுக கொடுத்த மிரட்டலால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார்..இதுதொடர்பாக ரஜினிகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”. வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *