• March 17, 2026

காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் நின்ற கார்: 2 குழந்தைகளுடன் கணவன்  மனைவி பிணமாக மீட்பு

 காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் நின்ற கார்: 2 குழந்தைகளுடன் கணவன்  மனைவி பிணமாக மீட்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த பெட்டைக்குளத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக இன்று காலையில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கார் முழுவதும் தீக்கிரையான நிலையில், காரின் உள்ளே  4 பேர் உடல்கள் எரிந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தடய அறிவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்,

முதல்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி காரில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரபி, நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களது 2 குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் அங்கு எதற்காக வந்தார்கள். கார் எப்படி தீப்பிடித்தது என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *