கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
,கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டார்க் லைட் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
பல்வேறு வயது பிரிவின்டருக்கு இடையே நடந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ப்பள்ளி மாணவர்களான சதுரங்க வீரர்கள் பங்கேற்றனர்,.
போட்டி நிறைவில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், செஸ் அகாடமி நிர்வாகிகள் கருப்பசாமி, மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கலந்துகொண்டு சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 160 க்கும் மேற்பட்டோர் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
8 வயதிற்குட்பட்டோருக்கான சதுரங்க போட்டியில் ரேன்ஸ் பெர்வின் முதல் பரிசு, ஜெய்ஷிவானி 2ம் பரிசு, அக்ரிதி 3ம் பரிசு பெற்றனர்,,
10 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க போட்டியில் நந்திதா ரேணுகா முதல் பரிசு தோஷன்ராஜ் 2ம் பரிசு, பிரஜித் 3ம் பரிசு பெற்றனர்,

,13 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் முனிஸ்வரி முதல் பரிசு,திவ்ஷா 2ம்பரிசு, ஸ்ரீரிஜா 3ம் பரிசு, பெற்றனர்.
பொது பிரிவினருக்கான போட்டியில் ஹரிபிரசாத் முதல் பரிசு, மனிஷ்வார் 2ம் பரிசு, சாய்ஸ்ரீசரன் 3ம் பரிசு,பெற்றனர்.
கல்லூரி முதல்வர் செல்வராஜ், கோவில்பட்டி நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் கணேசமூர்த்தி உள்பட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.







