கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்; திமுக, அதிமுக வுக்கு கம்மநாயுடு மகாஜன சங்கம் கடிதம்
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலம், சார்ப்பில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி/. மற்றும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
எங்களது நீண்டநாள் கோரிக்கையான “வடுகர்களை *மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் கம்மவார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசாணை எண்.2 நாள் 7.1.2021 ன் படி தெலுங்கு மொழி பேசும் நம் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினர் என சான்று தடையில்லாமல் (இணையதளம் மூலம்)வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகளின் நலனுக்காக போராடி களம் பல கண்டவர். தமது களப்பணியின் போது இறுதியாக உயர்நீத்த இடம் கோவில்பட்டி ஆகும். எனவே மறைந்த அந்த விவசாய பெருமகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவில்பட்டியில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கோவில்பட்டி தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். கோவில்பட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.







